உள்ளூர் கிரிக்கெட் போட்டி மாஸ்டர் பிளாஸ்டர் அணி வெற்றி

நெட்டப்பாக்கம்: உள்ளூர் அளவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் மடுகரை மாஸ்டர் பிளாஸ்டர் அணி வெற்றி பெற்றது.

விழுப்புரம் மாவட்டம் நரசிங்கபுரத்தில், புதுச்சேரி, தமிழக பகுதிகளை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடந்தது. இப்போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 அணிகள் பங்குபெற்றன. இறுதி போட்டியில் மடுகரை மாஸ்டர் பிளாஸ்டர் அணியும், புருஷானூர் அணிகளும் மோதின.

முதலில் ஆடிய புருஷானுார் அணி 8 ஓவர் முடிவில் 66 ரன்கள் குவித்தனர். தொடர்ந்து அடிய மடுகரை மாஸ்டர் பிளாஸ்டர் அணி 8 ஓவர்களில் 68 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற மடுகரை மாஸ்டர் பிளாஸ்டர் அணிக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

Advertisement