தேசிய கூடைப்பந்து போட்டிக்காக மைதானம் தயார் செய்யும் பணி தீவிரம்

புதுச்சேரி: தேசிய கூடைப்பந்து போட்டிக்காக உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானம் தயார் செய்யும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
இந்திய கூடைப்பந்து சம்மேளனம், பாண்டிச்சேரி கூடைப்பந்து அசோசியேஷன், புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 40 வது தேசிய அளவிலான இளைஞர் கூடைப்பந்து போட்டி, வரும் 9ம் தேதி துவங்குகிறது.
உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக நடக்கும் இப்போட்டிகளில் நாடு முழுதும் உள்ள 30 மாநிலங்களை சேர்ந்த 55 அணிகள் கலந்து கொள்கின்றன.
இதற்காக, உப்பளம் ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் 3 மைதானமும், இந்திராகாந்தி வெளி விளையாட்டு அரங்கில் மேற்கூரையுடன் கூடிய 2 மைதானமும் தயார் செய்யும் பணி தற்போது தீவிரமாக நடந்தது.
மேலும், இப்போட்டியில் சிறப்பாக விளையாட்டு வீரர்கள், சர்வதேச போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
தர்பூசணி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்: அன்புணி வலியுறுத்தல்
-
வக்ப் வாரிய பிரச்னையில் சிக்கிய 1800 ஆண்டு பழமை வாய்ந்த கோவில்; ராஜ்யசபாவில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டம்
-
வக்ப் மசோதாவிற்கு எதிர்ப்பு: நிதிஷ் கட்சியில் இருந்து எம்.பி.,க்கள் ராஜினாமா
-
அணி மாறுகிறாரா சூர்யகுமார்: மும்பை கிரிக்கெட் சங்கம் மறுப்பு
-
இரட்டை இலை சின்ன வழக்கு: விசாரணைக்கு காலக்கெடு கோரி இபிஎஸ் மனு
-
ரபாடா விலகல்: சிக்கலில் குஜராத்