அதிகரிக்கும் டூவீலர் திருட்டு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் சில மாதங்களாக டூவீலர் திருட்டு அதிகரித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை சப் டிவிஷன்களில் அதிகமாக டூவீலர்கள் திருடு போகிறது. கடந்த ஒரு மாதத்தில் மாவட்டத்தில் ஏதாவது இரண்டு மூன்று ஸ்டேஷனில் தினசரி டூவீலர் திருட்டு வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
காளையார்கோவில் அருகே காயாஓடை அமிர்தனயாகம் 21. இவர் காளையார்கோவில் மேல்நிலை பள்ளி அருகே டூவீலரை நிறுத்தி சென்றார். திரும்பி வந்து பார்த்த போது டூவீலர் திருடுபோய் உள்ளது. காரைக்குடி லக்ஷ்மி நகர் மதியழகன் மகன் அஜய்கார்த்திக் 23. இவர் சாமியார்தோட்டம் பகுதியில் உள்ள கடை அருகே டூவீலரை நிறுத்தியுள்ளார் அதுவும் திருடு போனது.
மானாமதுரை சிப்காட் ஆறுமுகம் மகன் மகாலிங்கம் 57. இவர் மானாமதுரை மார்க்கெட் பகுதியில் உள்ள கோவிலில் தனது டூவீலரை நிறுத்திவிட்டு மார்க்கெட்டிற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது டூவீலர் திருடுபோய் உள்ளது.