ஸ்ரீவில்லிபுத்துாரில் மான் வேட்டை: 4 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை மலைப்பகுதியில் வேட்டை நாய்களை வைத்து மான் வேட்டையாடிய நான்கு பேரை வனத்துறையினர்கைது செய்து, வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் வனச்சரகர் செல்வமணி தலைமையிலான வனத்துறை தனிப்படையினர் நேற்று காலை 10:30 மணிக்கு ரங்கர் கோயில் பீட் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் நாய்களை வைத்து பெருமாள் பட்டியைச் சேர்ந்த தங்கராஜ் 30, முத்துகிருஷ்ணன்38, ஆகியோர் மான் வேட்டையில் ஈடுபட்டதை கண்டறிந்து பிடித்தனர்.

அவர்களிடம் நடத்தியவிசாரணையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த சந்திரகுமார் 26, நாகராஜ் 34, ஆகியோரும் மான் வேட்டையில் தொடர்பு இருப்பதை கண்டறிந்தனர்.

இதனையடுத்து வன உயிரின பாதுகாப்புச் சட்டப்படி 4 பேரையும் கைது செய்து அவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

Advertisement