தென்காசி கோயில் கும்பாபிேஷகத்திற்கு தடை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஏப்., 7 ல் கும்பாபி ேஷகம் நடத்த உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்தது.

தென்காசி நம்பிராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் 14 ம் நுாற்றாண்டில் பராக்கிரம பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. இங்கு ஏப்.,7ல் கும்பாபி ேஷகம் நடக்க உள்ளது. நிபுணர் குழு பரிந்துரைப்படி புனரமைப்பு பணி நடக்கவில்லை. செயல் அலுவலர் தன்னிச்சையாக பணியை மேற்கொள்கிறார்.

கோயில் வளாகத்திலிருந்து அனுமதியின்றி தோண்டி அள்ளிய மணலை தனியாருக்கு விற்பனை செய்துள்ளனர். இதிலிருந்து கிடைக்க வேண்டிய வருமானத்தை கோயில் கணக்கில் வரவு வைக்கவில்லை. மணல் அள்ளியதால் கோயில் சுவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜகோபுரத்தில் மழைநீர் கசிவை சரி செய்யவில்லை. வண்ணம் மட்டுமே பூசப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் வேலை முழுமையடையவில்லை. சுவாமிகள் புறப்பாடு வாகனங்களை சீரமைக்கவில்லை. தேர் திருப்பணி துவங்கவில்லை. அன்னதானக்கூடம் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. புனரமைப்பு பணி முழுமையடையும் வரை கும்பாபிேஷகம் நடத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.

புனரமைப்பு பணியை ஆய்வு செய்ய வழக்கறிஞர் கமிஷனரை நியமிக்க வேண்டும். கோயில் நிதியை தவறாக பயன்படுத்தியதில் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் விசாரணையின்போது அரசு தரப்பு, 'புனரமைப்பு பணி 100 சதவீதம் முடிந்துவிட்டது,' என தெரிவித்து அறிக்கை தாக்கல் செய்தது. நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு நேற்று விசாரித்தது.

மனுதாரர் தரப்பு: புனரமைப்பு பணி முழுமையடையவில்லை. 81 மரங்களில் 31 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. அரசு தரப்பின் அறிக்கையில் முரண்பாடுகள் உள்ளன எனக்கூறி போட்டோ ஆதாரங்களை சமர்ப்பித்தது.

நீதிபதிகள்: கும்பாபி ேஷகம் நடத்த இடைக்காலத்தடை விதிக்கப்படுகிறது. கோயிலை ஆய்வு செய்ய 2 நிபுணர்கள் கொண்ட குழுவை சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் நியமிக்க வேண்டும். அக்குழுவுடன் ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை வழக்கறிஞர் ஆனந்தவள்ளியை கமிஷனராக நியமிக்கிறோம். அவர்கள் ஏப்.,21 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

Advertisement