இதயங்களை இணைக்கும் ராமாயணம்; பிரதமர் மோடி பெருமிதம்

24

பாங்காங்: கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை ராமாயணம் இணைக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


தாய்லாந்தின், பாங்காக் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், தாய்லாந்துவாழ் இந்தியர்கள் அதிக அளவில் திரண்டு, இந்திய தேசியக் கொடிகளை கைகளில் ஏந்தியவாறு பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.


Latest Tamil News
வேத மந்திரங்களை ஓதியும், பாரம்பரிய நடனங்களை ஆடியும் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அவர்களுடன் பிரதமர் மோடி குழு புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். பின்னர், தலைநகர் பாங்காக்கில், அந்நாட்டு கலைஞர்கள் நிகழ்த்திய ராமாயண நாட்டிய நாடகத்தை பிரதமர் மோடி ரசித்து பார்த்தார்.
Latest Tamil News


இந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அவர், 'ஆசிய கண்டத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை ராமாயணம் இணைக்கிறது' என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement