அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பாதிரியார் சுட்டுக்கொலை

12

வாஷிங்டன் : அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.


கான்சாஸ் மாகாணம் செயிண்ட் பீட்டர்ஸ் கத்தோலிக்க ஆலயத்தில் கடந்த 2011முதல் பாதிரியாராக இருந்தவர் அருள் கராசால்லா. இவரை மர்ம மனிதர் ஒருவர் ஆலயம் அருகே சுட்டு கொன்றார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இவரது கொலையால் பெரும் அதிர்ச்சி அடைந்ததாகவும், இந்த வன்செயலால் எங்களின் நண்பரை இழந்து துக்கப்படுகிறோம் என்றும் ஆர்சி பிஷப் ஜோசப் நவ்மான் கூறியுள்ளார்.


3 முறை சுட்டார்





ஆலயத்தின் நிர்வாக குழுவில் உள்ள கிரீஸ் ஆண்டர்சன் கூறியதாவது: ஒரு வயதான மனிதர் பிஷப் அருகே வந்தார். 3 முறை சுட்டார். ஆனால் ஏன் சுட்டார், எதற்காக சுட்டார் என தெரியவில்லை என்றார்.

Advertisement