மங்களநாதர் சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

1

ராமநாதபுரம்: உலகின் முதல் சிவாலயம் என்று போற்றப்படும் ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்கள நாதர் சுவாமி கோவிலில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.

இக்கோயில் கும்பாபிஷேக விழா மார்ச் 31ல் கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. ஏப்.1ல் இங்குள்ள அபூர்வ மரகத நடராஜருக்கு சந்தனம் களையப்பட்டு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு ஆறு கால யாகசாலை பூஜைகள் முடிந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.

தொடர்ந்து வேத மந்திரம் முழங்க கணபதி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு காலை 6:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9:00 முதல் ராஜகோபுரங்கள், சுவாமி, அம்மன் மூலவர்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இரவு 7:00 மணிக்கு மங்களநாதர் சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவை காண ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Advertisement