வக்ப் மசோதாவுக்கு நடிகர் விஜய் எதிர்ப்பு

21

சென்னை: வக்ப் மசோதாவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

லோக்சபாவில் வக்ப் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த மசோதா பற்றி பரிசீலிக்க அமைக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டுக் குழு, வரலாற்றிலேயே முதன்முறையாக வழக்கத்திற்கு மாறாக, இணக்கமான பரிந்துரைகளை மறுத்தது என்று அக்கூட்டுக்குழுவில் இடம்பெற்ற எதிர்கட்சி உறுப்பினர்களே குற்றம் சாட்டி உள்ளனர்.

ஆகேவே, இந்த சட்டத் திருத்த மசோதாவை உடனே திரும்ப பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது. திரும்ப பெறாத பட்சத்தில், வக்ப் உரிமை சட்டப் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகமும் பங்கேற்று போராடும்.
இவ்வாறு விஜய் அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement