கார் பார்க்கிங் பிரச்னை; பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது!

சென்னை : சென்னையில் கார் பார்க்கிங் பிரச்னையால் நீதிபதி மகனுடன் கைகலப்பில் ஈடுபட்ட பிக் பாஸ் பிரபலம் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷன், கூகுள் குட்டப்பா படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். சென்னை முகப்பேர் அருகே தர்ஷன் குடியிருக்கும் வீட்டின் அருகே டீக்கடை ஒன்று இருந்துள்ளது, இந்தக் கடையில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி, நேற்று இரவு, தன் தோழியுடன் டீ குடிப்பதற்காக, காரில் சென்றார்.
தர்ஷனின் வீட்டு முன்பு காரை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளனர். அப்போது, காரை எடுக்குமாறு தர்ஷன் கூறியுள்ளார். இதனால், அவருக்கும், ஐகோர்ட் நீதிபதியின் மகனுக்கும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. இதில், நீதிபதியின் மகன் மற்றும் அந்தப் பெண் காயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக ஜெ.ஜெ., நகர் போலீஸ் ஸ்டேஷனில் நீதிபதி மகன் புகார் அளித்தார். நடிகர் தர்ஷன் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. இரு தரப்பு புகாரையும் ஏற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நடிகர் தர்ஷனை போலீசார் கைது செய்துள்ளனர்.
நீதிபதியின் மகன், அவரது தோழியை தாக்கியதாக பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (7)
Mecca Shivan - chennai,இந்தியா
05 ஏப்,2025 - 20:27 Report Abuse

0
0
Reply
சூரியா - ,
05 ஏப்,2025 - 06:57 Report Abuse

0
0
Reply
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
04 ஏப்,2025 - 18:26 Report Abuse

0
0
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
04 ஏப்,2025 - 19:47Report Abuse

0
0
Reply
அப்பாவி - ,
04 ஏப்,2025 - 17:48 Report Abuse

0
0
Reply
Balu - ,
04 ஏப்,2025 - 13:52 Report Abuse

0
0
Reply
Padmasridharan - சென்னை,இந்தியா
04 ஏப்,2025 - 13:42 Report Abuse

0
0
Reply
மேலும்
-
அமெரிக்கா - சீனா இடையே வரி விதிப்பு போர்; ரஷ்யா கிண்டல்
-
மாதவிடாய்; வகுப்பறை வாசலில் தேர்வு எழுதிய மாணவி; விசாரணைக்கு உத்தரவு
-
வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை
-
நானே பா.ம.க., தலைவர்: மகனது தலைவர் பதவியை பறித்தார் ராமதாஸ்
-
அரசுக்கு என்ன தயக்கம்? போக்குவரத்துத்துறை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணை விவகாரம்; தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
ரூ.30 லட்சம் ஹவாலா பணம், ஹெராயின் பறிமுதல்; பஞ்சாப் போலீசார் நடவடிக்கை
Advertisement
Advertisement