வளர்ச்சியை நம்புகிறோம்: எல்லை விரிவாக்கத்தை அல்ல: பிரதமர் மோடி

பாங்காக்:'' இந்தியாவும், தாய்லாந்தும் வளர்ச்சிக் கொள்கையை நம்புகின்றன. எல்லை விரிவாக்கக் கொள்கையை அல்ல,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ளார். அங்கு அவர் அந்நாட்டு பிரதமர் பேடோங்டர்ன் ஷினாவத்ராவை சந்தித்தார். அப்போது இருவர் முன்னிலையிலும் இரு நாடுகளுக்கு இடையே பல துறைகளில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி கூறியதாவது: இந்திய மக்கள் சார்பாக, தாய்லாந்தில் கடந்த 28 ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்.
நூற்றாண்டுகளை தாண்டிய இந்தியா தாய்லாந்து உறவானது, நமது கலாசாரத்திலும், ஆன்மிகத்திலும் வேரூன்றி உள்ளது. புத்த மதம் மூலம் இரு நாட்டு மக்களும் இணைக்கப்படுகின்றனர். எனது வருகையை நினைவு கூரும் வகையில் 18 ம் நூற்றாண்டின் ராமாயண சுவரோவிய ஓவியங்களை அடிப்படையாக கொண்ட சிறப்பு தபால் தலையை வெளியிட்ட தாய்லாந்து அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவில் நடந்த மஹா கும்பமேளாவிலும் இரு நாடுகளுக்கு இடையிலான பழமையான தொடர்பு வெளிப்பட்டது. தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 600 புத்தமதத்துறவிகள் இந்த ஆன்மிகம் மற்றும் கலாசார நிகழ்வில் பங்கேற்றனர். இது சமூக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் கிழக்கு நோக்கிய பார்வை மற்றும் இந்தோ பசுபிக் கொள்கை சார்ந்த இந்தியாவின் திட்டங்களில் தாய்லாந்துக்கு சிறப்பான இடம் உண்டு. இன்று, நமது உறவை, பிராந்திய ஒத்துழைப்பிற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளோம்.
இரு நாடுகளும் எல்லை விரிவாக்கக் கொள்கையை நம்பவில்லை. வளர்ச்சிக் கொள்கையை நம்புகிறோம்.விசாரணை மற்றும் பாதுகாப்பு முகமைகள் தொடர்பான பேச்சசுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளோம். சைபர் கிரைம் குற்றங்களில் சிக்கிய இந்தியர்களை திருப்பி அனுப்பிய தாய்லாந்து அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
சட்ட விரோத குடியேற்றம் மற்றும் ஆட் கடத்தலுக்கு எதிராக இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தாய்லாந்து இடையே கல்வி, சுற்றுலா மற்றும் கலாசாரம் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது என முடிவு செய்துள்ளோம். வர்த்தகம், முதலீட்டை அதிகரிப்பது குறித்தும் ஆலோசித்து உள்ளோம் . இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
வாசகர் கருத்து (4)
சுரேஷ்சிங் - ,
03 ஏப்,2025 - 19:34 Report Abuse

0
0
vivek - ,
03 ஏப்,2025 - 20:49Report Abuse

0
0
Ganapathy - chennai,இந்தியா
03 ஏப்,2025 - 20:54Report Abuse

0
0
Reply
TRE - ,இந்தியா
03 ஏப்,2025 - 19:28 Report Abuse

0
0
Reply
மேலும்
-
டாஸ்மாக் வழக்கு; வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி தமிழக அரசு மனு
-
பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் சொத்து ரூ. 170 கோடி
-
ஏப்.,9 ல் அனைத்துக்கட்சி கூட்டம்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
இளைஞர்களின் கனவு பறிபோவதை அனுமதிக்க முடியாது; அண்ணாமலை ஆவேசம்
-
தென்கொரிய அதிபர் யூன் சுக் லியோல் பதவி நீக்கம் உறுதி: 60 நாட்களில் புதிய தேர்தல்!
-
வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
Advertisement
Advertisement