பீஹார், மேற்குவங்கம், தமிழகத்திற்கு அமித் ஷா பயணம்

புதுடில்லி: இம்மாதத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ,பீஹார், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பீகார், மேற்குவங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு அமித் ஷா பயணங்களை தீவிரப்படுத்த இருக்கிறார்.
பா.ஜ., தனது கூட்டணிக் கட்சிகளுடன் பீஹாரில் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், மற்ற இரண்டு மாநிலங்களில் கால்பதித்து, விரிவுபடுத்தவும் முயற்சிக்கிறது.
தேர்தல் முடியும் வரை அமித் ஷா இந்த மாநிலங்களில் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் பா.ஜ., அமைப்புக் கூட்டங்களை நடத்துவார். அமித் ஷா, ஏப்ரல் 14 மற்றும் 15 தேதிகளில் மேற்கு வங்கத்திலும், ஏப்ரல் 30ம் தேதி பீகாரிலும் இருப்பார். மேலும் தமிழ்நாட்டிற்கான திட்டம் இறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த மாநிலங்களில் பா.ஜ.,வின் அரசியல் ஸ்தாபனத்தை வலுப்படுத்துவதே நோக்கம்.
இவ்வாறு பா.ஜ., வட்டாரங்கள் கூறியுள்ளது.
மேலும்
-
கார் பார்க்கிங் பிரச்னை; பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது!
-
டாஸ்மாக் வழக்கு; வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி தமிழக அரசு மனு
-
பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் சொத்து ரூ. 170 கோடி
-
ஏப்.,9 ல் அனைத்துக்கட்சி கூட்டம்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
இளைஞர்களின் கனவு பறிபோவதை அனுமதிக்க முடியாது; அண்ணாமலை ஆவேசம்
-
தென்கொரிய அதிபர் யூன் சுக் லியோல் பதவி நீக்கம் உறுதி: 60 நாட்களில் புதிய தேர்தல்!