இந்திய அணி 127வது இடம்: 'பிபா' கால்பந்து தரவரிசையில்

புதுடில்லி: 'பிபா' கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 127வது இடத்துக்கு தள்ளப்பட்டது.


கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') வெளியிட்டது. இதில் இந்திய அணி, 1132.03 புள்ளிகளுடன் 126வது இடத்தில் இருந்து 127வது இடத்துக்கு பின்தங்கியது. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான ஆசிய கோப்பை தகுதிச் சுற்று போட்டியை 'டிரா' (0-0) செய்திருந்தது இந்தியா. இதனையடுத்து வங்கதேச அணி (904.16 புள்ளி) 185வது இடத்தில் இருந்து 183வது இடத்துக்கு முன்னேறியது.
'நடப்பு உலக சாம்பியன்' அர்ஜென்டினா (1886.16) 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறது. பிரான்ஸ் அணி (1852.71) 3வது இடம் பெற்றது. ஸ்பெயின் அணி (1854.64) 2வது இடத்துக்கு முன்னேறியது. இங்கிலாந்து (1819.2), பிரேசில் (1776.03) அணிகள் முறையே 4, 5வது இடத்தை தக்கவைத்துக் கொண்டன. போர்ச்சுகல் அணி (1750.08) 7வது இடம் பிடித்தது. நெதர்லாந்து அணி (1752.44) 6வது இடத்தை கைப்பற்றியது. அடுத்த மூன்று இடங்களில் பெல்ஜியம் (1735.75), இத்தாலி (1718.31), ஜெர்மனி (1716.98) அணிகள் உள்ளன.

Advertisement