ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் கலக்கல்

ஜாம்ஷெட்பூர்: ஐ.எஸ்.எல்., கால்பந்து அரையிறுதிக்கான முதல் சுற்றில் ஜாம்ஷெட்பூர் அணி 2-1 என, மோகன் பகானை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. ஜாம்ஷெட்பூரில் நடந்த 2வது அரையிறுதிக்கான முதல் சுற்றில் ஜாம்ஷெட்பூர், மோகன் பகான் அணிகள் மோதின. ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் ஜாவி சிவேரியோ ஒரு கோல் அடித்தார். இதற்கு, 38வது நிமிடத்தில் மோகன் பகான் அணியின் ஜேசன் கம்மிங்ஸ் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். முதல் பாதி 1-1 என சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் 'ஸ்டாபேஜ்' நேரத்தில் (90+1வது நிமிடம்) எழுச்சி கண்ட ஜாம்ஷெட்பூர் அணிக்கு ஜாவி ஹெர்ணான்டஸ் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். ஆட்டநேர முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இவ்விரு அணிகள் மோதும் அரையிறுதிக்கான 2வது சுற்று, ஏப். 7ல் கோல்கட்டாவில் நடக்கவுள்ளது. இப்போட்டியை 'டிரா' செய்தாலே ஜாம்ஷெட்பூர் அணி பைனலுக்கு முன்னேறிவிடும். மோகன் பகான் பைனலுக்குள் நுழைய, குறைந்தபட்சம் 2-0 என வெற்றி பெற வேண்டும்.
மேலும்
-
இரு நாட்டு உறவை கெடுக்கும் வகையில் செயல்படக்கூடாது: முகமது யூனுசிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
-
புதிய மதம் வரப்போகுது : இமாம் புது தகவல்
-
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
-
வக்ப் மசோதாவை ஆதரித்த முஸ்லிம் நபர் மீது தாக்குதல்; 3 பேர் கைது
-
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்கள், நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
கர்நாடக அரசு தீவிரம்: மேகதாது விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்