மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த அரும்பாக்கம் கிராமத்தில் வசித்தவர் வேலவன், 31. பெயின்டர். எளாவூர் அடுத்த திப்பன்பாளையம் கிராமத்தில், சதீஷ்குமார், 33, என்பவர் புதிதாக கட்டிய வீட்டில், நேற்று பெயின்ட் அடித்துக்கொண்டிருந்தார்.

எதிர்பாராத விதமாக, மின் கம்பி மீது அலுமினிய ராட் உரசி மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் மயங்கி விழுந்தார். எளாவூர் சோதனைச்சாவடி வளாகத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், பரிசோதனை செய்ததில், அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர். ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement