மாதவிடாய்; வகுப்பறை வாசலில் தேர்வு எழுதிய மாணவி; 3 பேர் மீது வழக்கு

11

கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையத்தில் மாதவிடாய் ஏற்பட்ட மாணவியை வகுப்பறையில் அமர்ந்து தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.


8ம் வகுப்பை சேர்ந்த அம்மாணவி, வகுப்பறை முன் படியில் அமர்ந்து தேர்வெழுதுவதை கண்டு அவரது உறவினர் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர். இதற்கு, 'இங்கு அப்படித்தான் நடக்கும்; வேண்டுமென்றால் வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என ஆசிரியர்கள் கூறியதால் அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணைக்கு உத்தரவு



மாதவிடாய் ஏற்பட்ட மாணவியை வகுப்பறைக்கு வெளியே தேர்வு எழுத வைத்த பள்ளியில் விசாரணை நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இனி இது போல் செய்யக்கூடாது என்று அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

சஸ்பெண்ட்



இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி முதல்வரை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

வழக்குப்பதிவு



இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளி தாளாளர் தங்கவேல் பாண்டியன், உதவி தாளாளர் ஆனந்தி, உதவியாளர் சாந்தி ஆகியோர் 3 பேர் மீது இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement