வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை

குன்னுார்: குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வருகை தந்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், போர் நினைவு சதுக்கத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில், முப்படை இளம் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு பெறுகிறது. இதையொட்டி, ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு நேற்று இரவு, 7:30 மணிக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வந்தார்.



அவருடன், வருகை தந்த முப்படைகளின், 2வது தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் இன்று (ஏப்ரல் 10) காலை 9:45 மணிக்கு போர் நினைவு சதுக்கத்தில், முதலில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


பிறகு ராஜ்நாத் சிங், மலர் வளையம் வைத்து, மவுன அஞ்சலி செலுத்தினார். சிறப்பு விருந்தினர் பதிவேட்டில் கையெழுத்திட்டார். தொடர்ந்து, முப்படை பயிற்சி இளம் அதிகாரிகள் மத்தியில், நடக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உரையாற்றினார். ராணுவ பயிற்சி கல்லுாரி பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Advertisement