கனடாவில் கிருஷ்ணர் கோவிலை சேதப்படுத்திய இருவருக்கு போலீசார் வலை


ஒட்டாவா: கனடாவில், ஸ்ரீகிருஷ்ணர் பிருந்தாவன கோவிலின் முகப்பு பகுதியை சேதப்படுத்திய இருவரின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டு அவர்களை தேடி வருகின்றனர்.


கனடாவின் ஜார்ஜ் டவுன் பகுதியில் ஸ்ரீகிருஷ்ணா பிருந்தாவன கோவில் அமைந்து உள்ளது. கடந்த மார்ச் 30 ம் தேதி நள்ளிரவு இக்கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர் சேதப்படுத்தினர்.


இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதில், கோவிலுக்குள் வரும் இரண்டு பேரில் ஒருவன், கோவில் நுழைவு வாயிலில் சேதம் ஏற்படுத்தினான். பெயர் பலகையை உடைத்து, தூக்கி வீசினான். இதனை பார்த்து மற்றொருவன் சிரித்து கொண்டிருந்ததுடன், பிறகு இருவரும் திட்டியபடி அங்கிருந்து வெளியேறினர்.


சிசிடிவியில் பதிவான நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு உள்ள போலீசார், அவர்கள் குறித்து தகவல் கிடைத்தால் போலீசிடம் பகிரும்படி கூறியுள்ளனர்

Advertisement