மாயமான லாரி மீட்பு

திருமங்கலம் : மதுரை மீனாம்பாள்புரம் நல்லதம்பி 44, வெளிமாநிலங்களில் ஆடுகள் வாங்கி விற்பதற்காக சொந்தமாக லாரி வைத்திருந்தார்.

ஏப்., 5 திருமங்கலம் நகராட்சி சந்தைக்கு ஆடுகளை கொண்டு வந்து இறக்கி விட்ட அவர் கரடிக்கல்லில் உள்ள உறவினரின் பெட்ரோல் பங்க் பின்புறம் லாரியை நிறுத்தியிருந்தார்.

நேற்று முன்தினம் அவரது ஓட்டுநர் லாரியை எடுக்க சென்ற போது மாயமாகி இருந்தது. போலீசார் விசாரித்தனர்.

நேற்று வாடிப்பட்டி பாண்டியராஜபுரம் பகுதியில் லாரி ஒன்று ஆட்கள் யாரும் இல்லாமல் நீண்ட நேரமாக நிற்பதை கவனித்த அப்பகுதியினர் போலீசாரிடம் தெரிவித்தனர்.

விசாரணையில் மாயமான நல்லதம்பியின் லாரி என தெரிய வந்தது. திருமங்கலத்திலிருந்து லாரியை ஓட்டி வந்து வாடிபட்டி பகுதியில் விட்டு சென்றவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement