குடிநீர் தொட்டியில் விரிசல் நத்தப்பேட்டையினர் அச்சம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 27 வது வார்டு, நத்தப்பேட்டை பகுதியினருக்கு குழாய் வாயிலாக குடிநீர் வழங்குவதற்காக, தண்டுமாரியம்மன் கோவில் அருகில், 35 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலைநீர் தேக்கத்தொட்டி கட்டப்பட்டது.

தற்போது தொட்டியின் துாண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் விரிசல் அதிகரித்து வருவதால், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி எப்போது இடிந்து விழுமோ என, அப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர்.

மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியை இடித்துவிட்டு, புதிய மேல்நிலை நீர்தேக்கதொட்டி கட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நத்தப்பேட்டை பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement