அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு; வெளியானது அறிவிப்பு

53

சென்னை: பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு தேசிய அளவிலான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக பா.ஜ., மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. அவரது பதவி காலம் நிறைவடைந்த பிறகு, தற்போது புதிய மாநில தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில், பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். இதனால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்பட்டு வந்தது.


சென்னை வானகரத்தில் நடந்த பா.ஜ., மாநில தலைவர் பதவியேற்பு விழாவில், நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.


மாநில தலைவராக இருந்த அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவருக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்று அக்கட்சியின் தொண்டர்களும், ஆதரவாளர்களும் எதிர்பார்த்து இருந்தனர்.


இந்த நிலையில், அண்ணாமலைக்கான புதிய பொறுப்பு குறித்து தமிழக தேர்தல் பொறுப்பாளர் கிஷண் ரெட்டி அறிவிப்பை வெளியிட்டார். பா.ஜ.,வின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை தேர்வு செய்யப்படுவதாக அறிவித்தார்.


அதோடு, தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன், பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதி, சரத்குமார், சசிகலா புஷ்பா, கனக சபாபதி, அஸ்வத்தாமன், வினோஜ் பி செல்வம், கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோரும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement