'சார்பு நீதிமன்றங்களுக்கு கூடுதல் அதிகாரம் தர அரசு நடவடிக்கை'

''சார்பு நீதிமன்றங்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்க, மத்திய அரசுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

தி.மு.க., - கோவிந்தராஜன்: இதுவரை சார்பு நீதிமன்றங்களில் தீர்வு கண்ட வழக்குகளுக்கு, இப்போது மாவட்ட அமர்வு நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் வழக்குகள் தாமதமாகின்றன. எனவே, சார்பு நீதிமன்றங்களிலேயே வழக்குகளை நடத்த வழி செய்ய வேண்டும்.

அமைச்சர் ரகுபதி: மத்திய அரசு கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்டங்களின்படி, சார்பு நீதிமன்றங்களில் நடந்த வழக்குகள், மாவட்ட அமர்வு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. சார்பு நீதிமன்றங்களுக்கு கூடுதல் கிடைக்க, மத்திய அரசுடன் பேசி, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement