மேற்குவங்க கலவரம்: தந்தை, மகன் வெட்டிக் கொலை;110 பேர் கைது

கோல்கட்டா:வக்ப் திருத்தச் சட்டம் தொடர்பாக முர்ஷிதாபாத்தில் நடந்த வன்முறையின் போது, ​​தந்தையும் மகனும் ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டனர். 110 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வக்ப் திருத்தச் சட்டம் மாநிலத்தில் அமல்படுத்தப்படாது என்று அறிவித்தார்.

அதை தொடர்ந்து மாநிலம் முழுவதும்
வக்ப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நடந்து வந்தன.

இந்நிலையில், இன்று முர்ஷிதாபாத்தில் புதிய வன்முறையின் போது இரண்டு பேர் ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டனர், மற்றொருவர் காயமடைந்தார். இதுவரை 110க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர், பல இடங்களில் போலீஸ் சோதனைகள் தொடர்கின்றன.


இதற்கிடையே,பா.ஜ., வன்முறை தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸை குறிவைத்து, எதிர் போராட்டங்களையும் நடத்தியது.

மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement