பட்டா மாற்ற ரூ. 9 ஆயிரம் லஞ்சம்; திருச்செங்கோட்டில் சர்வேயர் கைது

5


நாமக்கல்: நிலத்தை அளவீடு செய்து, கூட்டுப்பட்டாவில் இருந்து தனிப்பட்டாக மாற்ற ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த விஜயகுமாரி என்பவர், நிலத்தை அளவீடு செய்து கூட்டு பட்டாவில் இருந்து தனிப்பட்டாவாக மாற்றித் தர திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி வந்த சர்வேயர் பூபதியை அணுகினார்.


பட்டாவை மாற்ற லஞ்சம் தர வேண்டும் பூபதி கேட்டு உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத விஜயகுமாரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.


அவர்கள் ஆலோசனைப்படி, விஜயகுமாரி ரசாயனம் தடவிய ரூ.9 ஆயிரம் லஞ்சப்பணத்தை கொடுத்தார். அதனை வாங்கிய பூபதியை அங்கு மறைந்து இருந்த டி.எஸ்.பி., சுபாஷினி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement