வேதாந்த தேசிகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் அருகில், துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத்துறையினர் முடிவு செய்தனர். கடந்த பிப்., 10ம் தேதி பாலாலயம் நடந்தது. தொடர்ந்து 18.70 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த மாதம் 31ம் தேதி காலை 9:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது.
நேற்று அதிகாலை 3:00 மணி முதல் 4:15 மணிக்குள் விஸ்வரூபம், புண்யாஹவாசனம், காலை 5:15 மணி முதல், 6:45 மணிக்குள் கோவில் கோபுர விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. காலை 8:30 மணிக்கு சர்வ தரிசனமும், மாலை 6:00 மணிக்கு உற்சவர் புறப்பாடும் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பட்டா மாற்ற ரூ. 9 ஆயிரம் லஞ்சம்; திருச்செங்கோட்டில் சர்வேயர் கைது
-
மேற்குவங்க கலவரம்: தந்தை, மகன் வெட்டிக் கொலை;110 பேர் கைது
-
அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு; வெளியானது அறிவிப்பு
-
தமிழக பா.ஜ., தலைவரானார் நயினார் நாகேந்திரன்
-
லக்னோவுக்கு 181 ரன்கள் இலக்கு; கில், சாய் சுதர்சன் அரைசதம்
-
பிரபலங்கள் படங்களை வெளியிட்டு மோசடி: சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
Advertisement
Advertisement