ஓய்வூதியர் அமைப்பினர் காஞ்சியில் ஆர்பாட்டம்

காஞ்சிபுரம்:மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியம் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழுவினர், காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி காஞ்சிபுரம் தலைமை அஞ்சலகம் நுழைவாயிலில் நேற்று ஆர்பாட்டம் நடத்தினர்.

ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் சீதாராமன் தலைமையில் நடந்த ஆர்பாட்டத்தில், ஓய்வூதியர்களை ஓய்வு பெற்ற நாள் அடிப்படையில் வேறுபடுத்தும், 2025 மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில், பல்வேறு ஊழியர் சங்கத்தினர் நிர்வாகிகள் கோரிக்கையை வலியுறுத்தி கருத்துரை வழங்கினர்.

Advertisement