நோயற்ற வாழ்வுக்கு சிறுதானிய உணவுகளே சிறந்தது: கலெக்டர்
நோயற்ற வாழ்வுக்கு சிறுதானிய உணவுகளே சிறந்தது: கலெக்டர்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை துவக்கி வைத்து கலெக்டர் தினேஷ்குமார் பேசியதாவது:
சிறுதானிய உணவுகளை, நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். எளிதில் ஜீரணம் ஆவதற்கும், பசியை தூண்டுவதற்கும், ஆழ்ந்த உறக்கத்திற்கும் இந்த தானியங்கள் சிறந்ததாக அமையும். அதேபோல அனைத்து ஊட்டச்சத்துகளும் சிறுதானியங்களில் நிறைந்திருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
சிறுதானியங்களின் பயன்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை ஆகியவற்றை காட்டிலும், சிறுதானியங்களில் அதிக சத்துக்கள் உள்ளன. ஊட்டச்சத்துமிக்க சரிவிகித உணவுகளை தினசரி உணவில் சேர்த்து கொள்ளும் பழக்கத்தை வருங்கால சந்ததிகளுக்கு கற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு பேசினார்.கண்காட்சியில் சிறுதானிய உணவுகள் குறித்து பள்ளி மாணவ, மாணவியருக்கு வினாடி-வினா, சத்துணவு ஊழியர்களுக்கான சிறு
தானிய உணவு சமையல் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும்
-
பிரியங்காவுடன் வந்து ஆஜரானார் ராபர்ட் வாத்ரா; 3வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை
-
பத்ரசாமியின் ஒரு உருக்கமான கோரிக்கை..
-
குட் பேட் அக்லி வில்லன் நடிகர் மீது பிரபல நடிகை புகார்; போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறியதாக குற்றச்சாட்டு
-
அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்: நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
-
"நானும் அரசியலுக்கு வருவேன்" - ராபர்ட் வாத்ரா
-
ஒளி மற்றும் மரபு