"நானும் அரசியலுக்கு வருவேன்" - ராபர்ட் வாத்ரா

12

புதுடில்லி: "தனக்கு பல தரப்பில் இருந்து அரசியலுக்கு வருமாறு அழைப்புகள் வருகிறது. நானும் விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று பிரியங்கா கணவர் ராபர்ட் வாத்ரா கூறினார்.

2008 ஆம் ஆண்டு ஹரியானாவில் வாத்ரா ரூ.7.5 கோடிக்கு நிலத்தை வாங்கி ரூ.58 கோடிக்கு விற்றதாக கூறப்படுகிறது. இதில் பல கோடி சட்ட விரோத பணபரிமாற்றம் நடந்துள்ளது. விசாரணை சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ராபர்ட் வாத்ரா கூறியதாவது:


17 ஆண்டுகளுக்குப்பிறகு




மத்திய அரசும் புலனாய்வு அமைப்புகளும் அரசியல் நோக்கங்களுக்காக என்னை மீண்டும் மீண்டும் குறிவைத்து தாக்குகிறது. ஆனால் தான் அதற்கு அடிபணியப் போவதில்லை .
அமலாக்கத்துறை கேட்ட கேள்விகளையே மீண்டும், மீண்டும் கேட்கின்றனர்.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விசாரணை நடத்தப்படுவது ஏன்? இடையில் ஏன் இவ்வளவு நீண்ட இடைவெளி?

எல்லா ஆவணங்களும் எங்கள் நிறுவனத்திடம் சரியாக உள்ளது. 'நான் அரசியலில் நுழைய நினைக்கும் போதெல்லாம், அமலாக்கத்துறை மூலம் எனக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.' ஆனால் நான் கவலைப்படப் போவதில்லை. இன்னும் நான் வலுவாக வெளி வருவேன்.


அரசியலில் சேருமாறு எல்லா இடங்களிலிருந்தும் அழைப்புகள் வருகின்றன' சரியான நேரம் வரும்போது நான் நிச்சயமாக அரசியலில் நுழைவேன். இவ்வாறு அவர் கூறினார்

Advertisement