தம்பட்டம் அடிக்க கோவில் கும்பாபிஷேகம்; ஹிந்து முன்னணி தலைவர் காட்டம்

திருப்பூர்: வெற்றுப்பெருமையை தம்பட்டம் அடித்துக்கொள்ள, தமிழக அரசு கோவில்களில் கும்பாபிேஷகம் நடத்துவதாக, ஹிந்து முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
அவ்வமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
தென்காசி, காசி விஸ்வநாதர் கோவில் திருப்பணிகள் முழுதுமாக முடியாத நிலையில், அவசர கதியில் கும்பாபிஷேகம் நடத்த அரசு திட்டமிட்டது. அதற்கு மதுரை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், பல கோவில்களில் திருப்பணிகள் முறையாக நடக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. அரைகுறை பணிகளால் கும்பாபிஷேகம் முடிந்தும், பல கோவில்கள் பழுதான நிலையிலேயே உள்ளது.
பழனி முருகன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்களிலும் இப்பிரச்னை ஏற்பட்டது.
கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடைகளை அள்ளித் தருகின்றனர். ஆனால், நிர்வாகம் செய்யும் அலுவலர்கள், அறங்காவலர்கள் இதை முறையாக செலவிடுவதில்லை; முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.
தென்காசி விஸ்வநாதர் கோவிலில், கும்பாபிஷேக செலவுத் திட்டம், 1.67 கோடி ரூபாய் என அறிவித்துள்ளனர்.
செலவினங்கள், இஷ்டம்போல் காட்டப்பட்டுள்ளது.
திருச்செந்துார் கோவிலில் நடைபெறும் பணியில் அலட்சியத்தை, சுட்டிக்காட்டியவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அங்கு கட்டப்பட்டு வரும் மண்டபம் அதன் தடுப்புச்சாரம் அகற்றியவுடன் விழுந்து விட்டது. இதற்குப்பின், அரசு தரப்பில் அமைதி மட்டுமே காணப்படுகிறது.
தமிழக முதல்வர் இத்தனை ஆயிரம் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது என்று வெற்று தம்பட்டம் அடித்து, பெருமை பேசுவதை விடுத்து, கோவில்களில் உரிய காலத்தில் முறையான திருப்பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும்
-
'தக்காளி காய்ச்சல்' அதிகரிப்பு: குழந்தைகள் மீது கவனம் அவசியம்
-
வக்ப் மசோதாவுக்கு ஆதரவு எதிரொலி; நிதிஷ் கட்சியில் இருந்து 5வது முக்கிய தலைவர் விலகல்
-
பணப்பையை பறித்து சென்ற போலீஸ் எஸ்.ஐ.,சஸ்பெண்ட்
-
பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வருகை: 4000 போலீசார் பாதுகாப்பு
-
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் முழுமையாக குடிநீர் வினியோகம் செய்ய மக்கள் எதிர்பார்ப்பு
-
நகைக் கடன் பெற புதிய விதிகள்: ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவு