முதல்வர், அமைச்சரை சந்தித்து பேசுங்கள் ஆசிரியர்களுக்கு எம்.எல்.ஏ., 'அட்வைஸ்'

புதுச்சேரி: போராட்டத்தை கைவிட்டு, முதல்வர் மற்றும் அமைச்சந்தை சந்தித்து பேச ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ராமலிங்கம் எம்.எல்.ஏ., அழைப்பு விடுத்துள்ளார்.

ஒப்பந்த ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் பாலசேவிகா ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டி கடந்த மூன்று நாட்களாக சட்டசபை அருகில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களை சந்தித்த ராமலிங்கம் எம்.எல்.ஏ., ஆசிரியர்களிடம், போராட்டத்தை கைவிட்டு முதல்வர் மற்றும் கல்வி அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்தால் தங்களின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும். அதற்கு நானும் உறுதுணையாக இருப்பேன்.

கடந்த ஆட்சியில் எந்த ஒரு பணி நியமனமும் செய்யப்படவில்லை. என்.ஆர்.காங்., - பாஜ., கூட்டணி ஆட்சியில் தான் ஏராளமான பணி நியமனங்கள் செய்யப்பட்டு வருகிறது.

அதனால் தங்களது கோரிக்கையை கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றார்.

Advertisement