சப் இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயற்சி; பண்ருட்டி அருகே ரவுடி உள்ளிட்ட 4 பேர் கைது

பண்ருட்டி: பண்ருட்டி அருகே சப் இன்ஸ்பெக்டரை வழிமறித்து கத்தியால் வெட்ட முயற்சித்த ரவுடி உள்ளிட்ட 4 பேரை முத்தாண்டிக்குப்பம் போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் சிவராமன். இவருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று காலை 10:00 மணிக்கு ஏட்டுக்கள் பாலமுருகன், கிருஷ்ணவேல் ஆகியோருடன் முத்தாண்டிக்குப்பம் - கொள்ளுக்காரன்குட்டை ரோட்டில் கீழக்குப்பம் மேற்கு மலை குளம் அருகில் சொரத்தங்குழியை சேர்ந்த ஜெயராமன் மகன் மாம்பழம் என்கிற அசோக்ராமன் .28;. ரவுடி. மற்றும் தோப்புக்கொல்லை மருங்கர் பாலகுரு மகன் ஸ்ரீதர் என்கிற பாலஸ்ரீதரன்,24; இதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்திமகன் கோபு என்கிற அருண்குமுார்,23; கீழக்குப்பம் வேல்முருகன் மகன் மணிவேல்,21; ஆகிய 4 பேரும் அவ்வழியே செல்வோரை காத்தியை காட்டி மிரட்டி கொண்டிருந்தனர்.

இதனையடுத்து சப் இன்ஸ்பெக்டர் சிவராமன், உள்ளிட்ட அசோக்ராமன்,28; பிடித்து பைக்கில் ஏற்ற முயன்றபோது, நான்கு பேரும் அவர்கள் வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து போலீசாரை கொலை செய்ய முயற்சித்தனர். இதில் சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். எஸ்.பி.ஜெயக்குமார் உத்திரவின்பேரில் பண்ருட்டி டி.எஸ்.பி.,ராஜா, முத்தாண்டிக்குப்பம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் தப்பி ஒடிய நான்கு பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

முத்தாண்டிக்குப்பம்- நெய்வேலி சாலையில் வேகமாக பதிவு எண் இல்லாத இரு பைக்கில் தப்பிக்க முயன்றவர்களை போலீசார் பிடிப்பதற்கு விரட்டினர். அப்போது பைக்கில் இருந்து ரவுடி அசோக்ராமன்,28; கீழே விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டது. மற்றொருவரான பாலஸ்ரீதரன்,24; கையில் முறிவு ஏற்பட்டது. இதில் காயமடைந்த இருவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அருண்குமார், மணிவேல்,21; ஆகிய இருவரையும் போலீசார் பிடித்தனர். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல், பயங்கர ஆயுதங்களுடன் ,கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வழக்குபதிந்து 4 பேரையும் கைது செய்தனர்.

Advertisement