அடையாளம் தெரியாத முதியவர் சாவு

விழுப்புரம்: விழுப்புரம் பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் புதிய பஸ் நிலையம், புதுச்சேரி மார்க்க பஸ் நிறுத்த பகுதியில் கடந்த 2ம் தேதி காலை 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து கிடந்தார்.

ஆதரவின்றி அங்கு திரிந்த அடையாளம் தெரியாத அந்த முதியவர் குறித்து, பொது மக்கள் அளித்த தகவலின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வந்து, ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி, அன்று இரவு அவர் இறந்தார்.

இது குறித்து, விழுப்புரம் டவுன் வி.ஏ.ஓ., வள்ளல்பாரி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement