கொணலுார் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

செஞ்சி: கொணலுார் வரதராஜ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

செஞ்சி அடுத்த கொணலுாரில் பழமையான விநாயகர், மாரியம்மன், திரவுபதியம்மன், பெருந்தேவி தாயார் சமேத வரதராஜபெருமாள், பிடாரியம்மன், அரங்கநாதர், கெங்கையம்மன், அரியாத்தாள், கூத்தாண்டவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு திருப்பணிகள் நடந்த நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.

கடந்த 2ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. நேற்று காலை 6:00 மணிக்கு சிறப்பு யாகமும், விஸ்வரூபமும், 8:30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து கடம் புறப்பாடும், 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் அனைத்து கோவில் கலசங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

வானுார்



வானூர் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று காலை 10:00 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு ஸ்ரீதேவி பூதேவி, வரதராஜபெருமாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது.

Advertisement