பேரையூரில் கோடை மழை

பேரையூர்: பேரையூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல்

ஏற்பட்டது.

கோடை உழவுக்கு இந்த மழை உகந்ததாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். வெயிலின் தாக்கத்தால் வாடிய மக்கள் திடீரென பெய்த மழையால் மகிழ்ந்தனர். நேற்று மழை பெய்த போது வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியதால், வியர்வையில் நனைந்த மக்கள் இதமாக உணர்ந்தனர்.

Advertisement