சிட்கோவில் அடர் காடுகள் திட்டம்

திருமங்கலம்: கப்பலுார் சிட்கோவில் தொழிலதிபர்கள் சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்து மியாவாக்கி அடர் காடுகள் உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

சிட்கோ சுற்றுப்பகுதிகளை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 2 இடங்களில் மியாவாக்கி காடுகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது புதிதாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நிகழ்ச்சியில் ரோட்டரி ஆளுனர் கார்த்திக், வைகை அக்ரோ சேர்மன் நீதிமோகன், சிட்கோ தொழிலதிபர்கள் சங்கத் தலைவர் ரகுநாத ராஜா மரக்கன்றுகளை நடவு செய்தனர். உதவி ஆளுனர் சோமசேகர், சசிகலா, நிர்வாகிகள் ஹரிஹரன், பிரபு, கண்ணதாசன், நாகப்பன் கலந்து கொண்டனர்.

Advertisement