டேட்டா சயின்ஸ், எலக்ட்ரானிக் சிஸ்டம் படிப்பில் வேலைவாய்ப்பு அதிகம்
திண்டுக்கல் : டேட்டா சயின்ஸ், எலக்ட்ரானிக் சிஸ்டம் உள்ளிட்ட இன்ஜி., பி.எஸ்., படிப்புகளுக்கு அதிக வேலைவாய்ப்புகள் காத்திருக்கிறது என திண்டுக்கல்லில் தினமலர், கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் நடக்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி பேசினார்.
திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு பி.வி.கே., மகாலில் நடக்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி காலை அமர்வில் அனைவருக்கும் ஐ.ஐ.டி., என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:
ஜே.இ.இ., மெயின் தேர்வை 15 லட்சம் பேர் எழுதுகின்றனர். அதில் இரண்டரை லட்சம் பேர் ஜே.இ.இ., அட்வான்ஸ் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் 'டாப்' மதிப்பெண் பெறுவோர் தான் ஐ.ஐ.டி.,க்கு தேர்வாகின்றனர். இதை தவிர ஜே.இ.இ., இல்லாமல் பி.எஸ்., டேட்டா சயின்ஸ், எலக்ட்ரானிக் சிஸ்டம் போன்ற படிப்புகளை ஐ.ஐ.டி.,யில் படிக்கலாம். இது ஆன்லைன் படிப்பு. இதற்காக நடத்தப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். டேட்டா சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் படிப்புகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. இந்தியாவில் 30 கோடி அலைபேசிகள் தயாரிக்கப்படுகின்றன. அதற்கு தேவையான எலக்ட்ரானிக் சிப்கள் தயாரிக்க வேண்டும். இதற்காக இப்படிப்பு முடித்தால் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. இதவிர நேவல் மரைன், ஏரோ ஸ்பேஸ், பயோ மெடிக்கல், மருத்துவ உபகரணங்களை உருவாக்கும் கெமிக்கல் - மெக்கானிக்கல் சேர்ந்த பொறியியல் படிப்புகளையும் மாணவர்கள் தேர்வு செய்யலாம்.
மேலும்
-
சென்னையில் விதிகளை மீறி 10 மாடிகள் கட்டடம்; இடிக்கும் பணிகளில் இறங்கிய சி.எம்.டி.ஏ.
-
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; சீமான் வலியுறுத்தல்
-
மீனவர்கள், படகுகளை விடுவிக்கணும்; இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
-
அடுத்தாண்டு சட்டசபை தேர்தல்: நாம் தமிழர் வேதாரண்யம் தொகுதிக்கு இப்போதே வேட்பாளர் ரெடி
-
தாது மணல் முறைகேடு வழக்கு; கனிமவள நிறுவனங்களில் சி.பி.ஐ., சோதனை
-
90 சதவீதம் முஸ்லிம் வாக்காளர்களை கொண்ட ஊராட்சி; தலைவராக ஹிந்து பெண் தேர்வு: மத ஒற்றுமைக்கு உதாரணம்