இலங்கையின் உயரிய விருது சிறப்புகள் என்ன? இதோ முழு விபரம்!

கொழும்பு: பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருதான ஸ்ரீலங்கா மித்ர விபூஷணா வழங்கப்பட்டது. இந்த விருது குறித்து சிறப்புகள் பின்வருமாறு:
ஸ்ரீலங்கா மித்ர விபூஷணா விருதில் உள்ள "தர்ம சக்கரம்" இரு நாடுகளின் கலாசார மரபு மற்றும் பவுத்த பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.
அரிசி கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட Pun Kalasa செழிப்பை குறிக்கிறது. நவரத்தினம் (ஒன்பது விலைமதிப்பற்ற ரத்தினங்கள்) இரு நாடுகளுக்கும் இடையிலான விலைமதிப்பற்ற பழைய நட்புறவை குறிக்கிறது. இது தூய தாமரை இதழ்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. சூரியனும் சந்திரனும் முடிவற்ற காலத்தைக் குறிப்பதாக உள்ளன.
இந்த விருதில் உள்ள தர்ம சக்கரம் உள்ளிட்டவை இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கலாசார மற்றும் ஆன்மீக தொடர்பை எடுத்துரைக்கிறது.
தமிழில் பிரதமர் பதிவு
இந்த விருது குறித்து, தமிழில் பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: அதிபர் அநுரா திசநாயக இன்றைய தினம் 'ஸ்ரீலங்கா மித்ர விபூஷணா' என்ற விருது எனக்கு வழங்கப்பட்டமை மகத்தான பெருமைக்குரிய தருணம்.
இந்த உயரிய கவுரவம் எனக்கே மட்டும் உரித்தான ஒன்றல்ல, இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் கிடைக்கப்பெற்ற உயர் மரியாதையாகும். அத்துடன் இந்திய - இலங்கை மக்களிடையிலான வரலாற்று ரீதியான உறவுகள் மற்றும் ஆழ வேரூன்றிக் காணப்படும் நட்புறவை இது குறிக்கிறது.
இந்த கவுரவத்துக்காக இலங்கை அதிபர், அரசாங்கம் மற்றும் மக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.








மேலும்
-
போதையில் இருக்கிறாரா?: அரசு பஸ் ஓட்டுநர்களிடம் இனி தினமும் பரிசோதனை
-
திரிணமுல் - பா.ஜ., மோதல் மேற்கு வங்கத்தில் பதற்றம்
-
டில்லி உஷ்ஷ்ஷ்: அடக்கி வாசிக்கும் கேரள பா.ஜ.,
-
சாலையை கடக்கும் பாதசாரிகள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
-
கருவேல மரங்களை அகற்ற வனத்துறை முன்வருமா?
-
மின் வாரிய சிறப்பு முகாமில் 1,976 புகார் மனுக்களுக்கு தீர்வு