சுடுகாட்டிற்கு பாதை வசதி ஏற்படுத்த கோரிக்கை

காஞ்சிபுரம்:எடையார்பாக்கம் அடுத்த, கண்டிவாக்கம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு, கண்டிவாக்கம் கூட்டு சாலையில் இருந்து, கப்பாங்கோட்டூர் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் சுடுகாடு உள்ளது.

இந்த சுடுகாட்டிற்கு, ஏற்கனவே போடப்பட்ட சிமென்ட் சாலை இருபுறமும் கோரை புற்கள் மற்றும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்திருந்தன. மேலும், பல்வேறு விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகமாக உள்ளன.

இதனால், இறந்தவர்களை சுடுகாட்டிற்கு எடுத்து செல்லும் போது, விஷக்கடிக்கு ஆளாக நேரிடுமோ என, அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது.

எனவே, கண்டிவாக்கம் சுடுகாட்டிற்கு பாதை மற்றும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.

Advertisement