அமெரிக்காவில் டிரம்ப்பிற்கு எதிராக போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு எதிராக அந்நாட்டின் பல இடங்களில் போராட்டம் வெடித்து உள்ளது. டிரம்ப் அதிபராக பதவியேற்ற மூன்று மாதங்களுக்குள் நடந்த இந்தப் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியபவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார். பல வெளிநாடுகளுக்கான நிதியை குறைத்ததுடன், வீட்டில் இருந்து பணி செய்யும் முறையை ரத்து செய்தது, ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது, சில துறைகளை கலைப்பது என அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
மேலும் அமெரிக்க பொருட்களுக்கு பல நாடுகள் அதிக வரி விதிப்பதாக கூறி, இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி விகிதத்தை உயர்த்தி உள்ளார். சீனா, உள்ளிட்ட நாடுகளுடன், அமெரிக்க நட்பு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உலக நாடுகளின் பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்து உள்ளன.
இந்நிலையில் டிரம்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல மாகாணங்களில் போராட்டம் வெடித்து உள்ளது. வாஷிங்டன், நியூயார்க், ஹூஸ்டன், புளோரிடா, கொலராடோ, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட இடங்களில் நடந்த போராட்டங் களில் ஏராளமானோர் பங்கேற்றனர். டிரம்ப்பை கண்டித்து பேரணி நடத்தினர். வேன்கள் மற்றும் கார்களில் வந்து போராட்டங்களில் பங்கேற்றனர்.
'கைவிடுங்கள்' என்ற பதாகைகளை ஏந்தியபடி பேரணியில் பங்கேற்றனர். அப்போது, அமெரிக்க அரசு நிர்வாகத்தில் கோடீஸ்வரர்கள் தலையீடு, ஊழலை முடிவுக்கு கொண்டு வருதல், மருத்துவ உதவி மற்றும் உழைக்கும் மக்கள் நம்பி உள்ள திட்டங்களுக்கான கூட்டாட்சி நிதியைக் குறைப்பதை முடிவுக்கு கொண்டு வருதல் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
டிரம்ப் அதிபராக பதவியேற்ற மூன்று மாதங்களுக்குள் அவருக்கு எதிராக போராட்டம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






மேலும்
-
நீட் தேர்வு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம்: புறக்கணிப்பதாக அறிவித்தார் இ.பி.எஸ்.,
-
ஆழமாக வேரூன்றிய இந்தியா-அமீரக நட்பு: பிரதமர் மோடி பெருமிதம்!
-
அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை விசாரணைக்கு அழைத்து சென்றது அமலாக்கத்துறை!
-
விரைவில் வங்கதேசம் திரும்புவேன்: ஷேக் ஹசீனா திட்டவட்டம்
-
டாஸ்மாக் வழக்கை உச்சநீதிமன்றத்தில் திரும்ப பெற்றது தமிழக அரசு!
-
துபாய் இளவரசருக்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு