நெடுஞ்சாலை துறையில் புதிய கோட்டம் உருவாக்கம்

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், 4,663 சதுர கி.மீ., சுற்றளவு கொண்டது. இதில், 2,900 கி.மீ., சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பில் உள்ளது.

இதை புதுக்கோட்டை கோட்டப்பொறியாளர் அலுவலகம் மூலம் பராமரிப்பதில் இடர்பாடுகள் உள்ளன. இதை பராமரிக்க ஒதுக்கப்படும் நிதியும் போதுமானதாக இல்லை.

எனவே, சாலையை பராமரிக்க கூடுதல் நிதி பெறவும், சாலைகளை மேம்படுத்த வசதியாகவும் அறந்தாங்கியை தலைமையிடமாக கொண்டு புதிய கோட்டப்பொறியாளர் அலுவலகம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் கூறியதாவது:

புதிதாக அறந்தாங்கி கோட்டப்பொறியாளர் அலுவலகம் அமைக்கப்பட உள்ளது. புதுக்கோட்டை உட்கோட்டம், கிழக்கு மற்றும் மேற்கு என, இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. விராலிமலை புதிய உட்கோட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் கீரனுார் உட்கோட்டத்தை சேர்த்து, நான்கு உட்கோட்டங்களுடன் புதுக்கோட்டை கோட்டப்பொறியாளர் அலுவலகம் செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement