கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள்

திண்டுக்கல்:திண்டுக்கல்மாவட்டம் சின்னாளபட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி . இவர் முன்விரோதத்தில் 2021ல் அங்குள்ள குளக்கரையில் கழுத்தை அறுத்து கொலை செய்து வயிறு, காலில் கல்லை கட்டி அருகே இருந்த கிணற்றில் வீசப்பட்டார் .


இது தொடர்பாக சிக்கனம்பட்டியை சேர்ந்த ராஜா 59, சரத்குமார் 33, சரவணன் , பிரகாஷ்32, ராஜகுரு, பஞ்வர்ணம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. இதில் ராஜா, சரத்குமார், பிரகாஷ்க்கு ஆயுள் தண்டனை , தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி சரண் , ராஜகுரு, பஞ்சவர்ணத்தை விடுதலை செய்தார். வழக்கு விசாரணை நடக்கும் போது சரவணன் தற்கொலை செய்து கொண்டார்.அரசு தரப்பில் சூசை ராபர்ட் ஆஜரானார்.

Advertisement