மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மளிகைக்கடை வைத்து கொடுத்து உதவிய அறக்கட்டளைக்கு பாராட்டு

புதுக்கோட்டை:ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் பகுதியில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு சமூக மாற்றத்தின் விதை அறக்கட்டளை சார்பாக, மளிகை கடை வைத்துக் கொடுத்தனர். இதற்கு பொதுமக்கள் பலர் பாரட்டுக்கள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரேணுகா, 38, இவர் முற்றிலும் நடக்க முடியாத ஒரு மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும், இவருக்கு அரசு சார்பில் எந்த விதமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவிலை என கூறப்படுகிறது.
தொடர்ந்து, ரேணுகாவிற்கு ஒரு தொண்டு நிறுவனம் சார்பில், நான்கு சக்கரம் பேட்டரி சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. இவரது சகோதரியும், அவரது கணவரும் இறந்து விட்டனர். இந்த தம்பதிகளின் மகன் முகிலேஷ், 8, என்பவரை ரேணுகா வளர்த்து வருகிறார்.
மேலும், வயதான தாய், தந்தையுடன் ஒரு தென்னை கீற்று வேய்ந்த ஒரு சிறிய வீட்டில் ரேணுகா வசித்து வருகிறார். இவர்களின் அன்றாட குடும்ப செலவிற்கும், மிகவும் கஷ்டப்பட்டு வறுமையில் இருந்து வருகின்றனர்.
இதனை அறிந்த, புதுக்கோட்டை 9ஏ., நத்தம் பண்ணை பகுதியில் உள்ள சமூக மாற்றத்தின் விதை அறக்கட்டளை சார்பாக, முற்கட்டமாக, நேற்று 20 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் வாங்கி அந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு, அவரது வீட்டிற்கு முன்பாக, ஒரு மளிகை கடை வைத்து கொடுத்தனர்.மேலும், அடுத்தடுத்து உதவிகள் வழங்குவதாக அந்த அறக்கட்ளையின் நிறுவனர் தீபாபிரபு தெரிவித்தார்.
மளிகை கடை திறப்பு விழாவில், அந்த அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜா, செல்வராஜ், நித்தியா, சரவணன் மற்றும் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மளிகை கடை வைத்து கொடுத்து, வாழ்வாதாரத்திற்கு வழிவகுத்து கொடுத்த சமூக மாற்றத்தின் விதை அறக்கட்டளைக்கு பொதுமக்கள் பலர் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
மேலும்
-
பா.ஜ., தலைவர் வீட்டின் அருகே கையெறி குண்டு தாக்குதல்: பஞ்சாபில் பாகிஸ்தானியர் உள்பட இருவர் கைது
-
பூரன், மார்ஷ் அதிரடி அரைசதம்: கோல்கட்டா அணிக்கு 239 ரன்கள் இலக்கு
-
நீட் தேர்வு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம்: புறக்கணிப்பதாக அறிவித்தார் இ.பி.எஸ்.,
-
ஆழமாக வேரூன்றிய இந்தியா-அமீரக நட்பு: பிரதமர் மோடி பெருமிதம்!
-
அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை விசாரணைக்கு அழைத்து சென்றது அமலாக்கத்துறை!
-
விரைவில் வங்கதேசம் திரும்புவேன்: ஷேக் ஹசீனா திட்டவட்டம்