வேலூர் உள்ளிட்ட 6 இடங்களில் இன்று சதம் அடித்தது வெயில்!

1

சென்னை: தமிழகத்தில் இன்று 6 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது.



தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காலநிலை மாறுபட்டு காணப்படுகிறது. கடும் வெயில் கொளுத்தி வந்த தருணத்தில் திடீரென வானிலை மாறியது. பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி வெப்பத்தை தணித்தது.


இந் நிலையில் இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்தது. கோவை மற்றும் அதன் புறநகரில் இன்று சிறிதுநேரம் மழை கொட்டியது. அதே நேரத்தில் 6 முக்கிய இடங்களில் வெயிலானது 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவானது.


அதிகபட்சமாக வேலூரில் 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. கரூர் பரமத்தி, சேலம், ஈரோட்டில் 101 டிகிரி வெப்பம் நிலவியது.


மதுரை விமான நிலைய பகுதியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தஞ்சை, திருத்தணியில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்தது.

Advertisement