உத்தரகோசமங்கையில் புதிய சந்தன காப்பில் மரகத நடராஜர்

உத்தரகோசமங்கை,:-ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் நேற்று
முன்தினம் காலை கும்பாபிஷேகம் நடந்த நிலையில் பச்சை மரகத நடராஜருக்கு புதிய
சந்தனக்காப்பிடப்பட்டு நடை அடைக்கப்பட்டது.
உத்தரகோசமங்கையில் உள்ள
அபூர்வ பச்சை மரகத நடராஜரை கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அரிய
நிகழ்வாக மூன்று நாட்கள் சந்தனம் களையப்பட்ட நிலையில் பக்தர்கள் தரிசிக்க
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்படி ஏப்.,2 முதல் பக்தர்கள்
தரிசனத்திற்காக சந்தனம் களையப்பட்ட மரகத நடராஜரின் திருமேனியில் சந்தனாதி
தைலம் பூசப்பட்டு காட்சி தந்தார்.
பொதுவாக மார்கழியில் ஆருத்ரா தரிசனத்திற்கு மட்டுமே ஆண்டிற்கு ஒரு முறை சந்தனம் படி களைதல் நடக்கும்.
தற்போது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சந்தனம் களையப்பட்ட அபூர்வ மரகத நடராஜரை பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இந்நிலையில்
கும்பாபிஷேகம் நிறைவை முன்னிட்டு நேற்று முன்தினம் மூலவர் மரகத நடராஜர்,
சிவகாமி அம்மனுக்கு 32 வகை அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள்
நிறைவேற்றப்பட்டு 50 கிலோ புதிய சந்தனம் சாற்றப்பட்டு இரவு 11:30 மணிக்கு
சன்னதி பூட்டப்பட்டது. வரும் நாட்களில் பக்தர்கள் கம்பி கதவுகளின்
துவாரத்தின் வழியாக திருமேனியில் சந்தனம் காப்பிடப்பட்ட மரகத நடராஜரை
தரிசனம் செய்யலாம்.
மேலும்
-
170 கி.மீ., ஆன்மிக பாத யாத்திரையை நிறைவு செய்தார் ஆனந்த் அம்பானி!
-
ஐதராபாத் அணி பேட்டிங்; குஜராத் அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு
-
வேலூர் உள்ளிட்ட 6 இடங்களில் இன்று சதம் அடித்தது வெயில்!
-
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மளிகைக்கடை வைத்து கொடுத்து உதவிய அறக்கட்டளைக்கு பாராட்டு
-
முதல்வர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்; அண்ணாமலை
-
ஜனாதிபதி விருது பெற்ற போலீஸ் அதிகாரி குற்றவாளி; பெண் போலீஸ் கொலை வழக்கில் தீர்ப்பு