எச்சரிக்கை பதாகை இல்லாத வேகத்தடை

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டில் இருந்து சோளிங்கருக்கு, 26 கி.மீ., துாரம் கொண்ட மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் குமாரராஜபேட்டை, வடகுப்பம் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன.

இச்சாலை வழியாக சோளிங்கரில் இருந்து பள்ளிப்பட்டு வழியாக திருப்பதிக்கு, தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தாங்கல் கூட்டு சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பால் பண்ணை எதிரே, இரண்டு வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், இது குறித்த எச்சரிக்கை பதாகை ஏதும் அமைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, எச்சரிக்கை பதாகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement