சீரடி சாய் தபோவனத்தில் ராம நவமி கொண்டாட்டம்
நாமக்கல்: நாமக்கல் - திருச்சி சாலை, இந்திரா நகரில், சீரடி சாய் தத்தா பிருந்தாவன் அமைந்துள்ளது. ராம நவமி மற்றும் சந்தன காப்பு திருவிழாவையொட்டி, நேற்று காலை, 6:30 மணிக்கு ஆரத்தி நிகழ்ச்சி, 7:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஷோடஸ உப-சாரம், விஷ்ணு சஹஸ்ரநாமம், அனுமன் சாலீசா பாராயணம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து, மதிய ஆரத்தி நடந்தது. மதியம், 2:00 மணிக்கு சந்தன காப்பு, சந்தன கூழ் ஊர்வலமாக எடுத்து வந்து பாபாவிற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
மாலை, 4:00 மணிக்கு சாய் பஜன், இரவு, 7:00 மணிக்கு பரத-நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராள-மான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல், வரும், 22ல் பிர-திஷ்டை தின விழா நடக்கிறது என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.