ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர் பலி
மதுரை : ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மதுரையில் இருந்து நேற்று மாலை புறப்பட்டு சிந்தாமணி ரயில்வே ஸ்டேஷன் வழியாக சென்றது.
தண்டவாளத்தில் ஒருவர் அமர்ந்திருப்பது தெரிய வந்ததால் ரயிலை இன்ஜின் டிரைவர் மெதுவாக இயக்கியுள்ளார். அருகே ரயில் வந்ததும் மது போதையில் இருந்த அந்த நபர் எழுந்ததும் ரயிலில் உரசி நிலைதடுமாறி விழுந்து பலியானார். விசாரணையில் அவர் சிந்தாமணி வாழைத்தோப்பைச் சேர்ந்த பாலமுருகன் 31, என்பதும், குடும்பத்தகராறு காரணமாக தண்டவாளத்தின் மீது அமர்ந்திருந்தவர் ரயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement