ஆர்ப்பாட்டம்

மதுரை : மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் தலைமை வகித்தார். விலை உயர்வை கண்டிக்கும் வகையில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நுாதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பகுதி செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement