அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்



நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மெட்டாலா, நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில், அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை வகித்தார்.


கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், ''நாம-கிரிப்பேட்டை மேற்கு ஒன்றியம், நாமக்கல் மாவட்டத்தில் அதிக-ளவு ஓட்டுகளை பெற்ற ஒன்றியமாக இருக்க வேண்டும். புதி-தாக பொறுப்பேற்றவர்களும், பூத் கமிட்டியில் உள்ளவர்களும் இனிவரும், 10 மாத காலம் கடுமையாக பணியாற்றி அதிக ஓட்டு-களை பெற்று மீண்டும், அ.தி.மு.க., ஆட்சியில் அமர்த்த வேண்டும்,'' என்றார்.

Advertisement