கிணற்றில் தவறி விழுந்த வெள்ளி தொழிலாளி பலி

சேலம்: சேலம், சன்னியாசிகுண்டு, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் என்ற அன்பு, 38. வெள்ளி தொழிலாளி. இவர் அடிக்கடி மது அருந்தி தகராறில் ஈடுபட்டதால், மனைவி விஜயலட்சுமி, விவாகரத்து பெற்றார்.

தனியே வசித்த அன்பு, தினமும் மது குடித்த நிலையில், சில நாட்களுக்கு முன், போதையில் அதே பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து பலியானார். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசாருக்கு கிடைத்த தகவலால், அவர்கள் உடலை மீட்டனர். நேற்று முன்-தினம் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement